தல59 படத்தின் புதிய அப்டேட்.. அஜித்துடன் ஜோடிபோடும் வித்யா பாலன், ஷ்ரத்தா
அஜித்தின் 59வது படம் குறித்த புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.
அஜித்தின் 58வது படமான விஸ்வாசத்தை அடுத்து, அஜித்தின் தீவிர ரசிகர்களுக்கு, தல59 குறித்த புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.
போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 59வது படம் உருவாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. பிங்க் என்ற பாலிவுட் படத்தின் ரீமேக் தான் தல59.
இந்நிலையில், இன்று தல59 படத்தில் நடிக்கும் நடிகை நடிகைகள் மற்றும் பணிப்புரிபவர்கள் குறித்த அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில், அஜித்துடன் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா, அபிராமி வெங்கடாசலம், ரங்கராஜ் பாண்டே, ஆதிக்ரவி ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
நிராவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்குனர் கே.கதிர், ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்பராயன், காஸ்ட்யூம் டிசைனர் பூர்ணிமா ராமசாமி, எடிட்டிங் கோகுல் சந்திரன், நிர்வாக தயாரிப்பாளர் பி.ஜெயராஜ் ஆகியோர் பணிபுரிகின்றனர்.
தல59 படத்தின் பெயர் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.