சந்தானத்தின் தில்லுக்குதுட்டு 2.. காத்தாடி போல் 2வது சிங்கிள் இதோ..

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள தில்லுக்குதுட்டு 2 படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

காமெடியில் கலக்கி வந்த சந்தானம் ஹீரோவாக நடித்த படம் தில்லுக்குதுட்டு. இயக்குனர் ராம்கோபால் இயக்கிய இந்தப் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தில்லுக்குதுட்டு இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குனர் முடிவு செய்தார். அதிலும் நடிகர் சந்தானம் ஹீரோவாக நடிக்கவும் ஒப்பந்தம் ஆனார். இந்தப் படத்தை சந்தானத்தின் ஹேண்ட் மேட் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து, பர்ஸ்ட் லுக், டீசர், சிங்கிள் ட்ராக் வெளியான நிலையில் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் இன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

More News >>