இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 243 ரன்களுக்கு ஆல் -அவுட்டானது!

மவுண்ட்மனுகனுயில் இரு அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி இன்று நடைபெறுகிறது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நிழசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் குபடில் (13) முன்ரோ (7) இந்தத் தடவையும் ஏமாற்றினர். கேப்டன் வில்லியம்சனும் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ராய் டெய்லர் (93), லாதம் (51) ஜோடி அபாரமாக ஆடி அரைசதம் அடித்தனர். பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 49 ஓவர்களில் 243 ரன்களுக்கு ஆல்அவுட்டானது நியூசிலாந்து . இந்தியத் தரப்பில் சமி 3 விக்கெட்டையும், புவனேஸ்வர்,சகால், பாண்ட்யா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆடி வருகிறது இந்தியா.5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்தியா இந்தப் போட்டியிலும் வென்றால் தொடரை கைப்பற்றி சாதனை படைக்கும்.

More News >>