ராஜ் தாக்கரே மகன் திருமண விழாவில் வண்ண உடைகளில் அசத்திய பாலிவுட் பிரபலங்கள்!
மும்பையில் நடந்த ராஜ் தாக்கரே மகன் திருமண விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள் விதவிதமான ஆடைகளில் பங்கேற்று அசத்தினர்.
நவநிர்மாண் கட்சித் தலைவர் ராஜ்தாக்கரே மகன் அமித் தாக்கரே - மிதாலி திருமணம் மும்பையில் நடந்தது. இதில் அமிதாப்பச்சன், ஜிதேந்திரா, ஷாரூக்கான், அமீர் கான், சல்மான் கான், மாதுரி தீட்ஷித், பர்கான் அக்தர் என பாலிவுட்டின் முன்னாள், இந்நாள் நட்சத்திரங்கள் ஏராௗமானோர் பங்கேற்று வாழ்த்தினர். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் மற்றும் அரசியல் முக்கிய பிரமுகர்களும் திரண்டு வாழ்த்து தெரிவித்தனர். விழாவில் பாலிவுட் பிரபலங்கள் விதவிதமான ஆடைகளில் பங்கேற்று பார்வையாளர்களை அசத்தினர்.