எடப்பாடி அரசுக்கு எதிரான பாஜகவின் ஸ்லீப்பர் செல் மாஃபா பாண்டியராஜன்?- அதிர்ச்சியில் அமைச்சர்கள்

சட்டமன்றத்தில் எந்த விவாதமாக இருந்தாலும் புள்ளிவிபரத்தை அடுக்கும் புலியாக இருக்கிறார் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன். தேமுதிகவில் இருந்தபோதும் சரி, அதிமுகவில் ஐக்கியமானபோதும் சரி, புள்ளிவிபரக் கணக்கை அவர் கைவிட்டதில்லை.

இதன் காரணமாக, அவருக்கு அமைச்சர் பதவியைக் கொடுத்தார் ஜெயலலிதா. கூவத்தூர் ஆப்ரேஷனை சசிகலா நடத்திக் கொண்டிருந்தபோது, 'சின்னம்மா சின்னம்மா...' என மீடியாக்களிடம் பவ்யம் காட்டியவர்,

ஒரேநாளில் ஓபிஎஸ் முகாமுக்குப் போய் சசிகலாவுக்கே ஜெர்க் கொடுத்தார். இதற்கு ஒரே காரணம், அவருக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் ஆர்எஸ்எஸ் விசுவாசம்தான்.

மந்திரி பதவியை இழக்க விரும்பாதவரை, ஓபிஎஸ் பக்கம் கொண்டு சென்றதில் ஆடிட்டருக்குப் பெரும் பங்கு உண்டு. மீண்டும் அதிமுகவில் தர்மயுத்த கோஷ்டிகள் உள்ளே நுழைந்தபோது, மாஃபாவுக்குப் பதவியைக் கொடுப்பதில் எடப்பாடிக்கு உடன்பாடில்லை.

டெல்லி பிரஷர் அதிகரித்ததால், டம்மியான தமிழ் வளர்ச்சித்துறைக்கு நியமிக்கப்பட்டார். இப்போதும் எடப்பாடி அண்ட் கோவின் கழுகுப் பார்வை, பாண்டியராஜனைச் சுற்றியே வட்டமிடுகிறது.

'டெல்லி அடுத்து என்ன செய்யப் போகிறது என்பது தெரிய வேண்டுமானாலும் பாண்டியராஜனைப் ஃபாலோ செய்யுங்கள்' என சக அமைச்சர்களே பாயிண்ட் எடுத்துக் கொள்கிறார்களாம். இப்போது பிஜேபியோடு கூட்டணி வைத்துக் கொள்வதில் எடப்பாடி ஜகா வாங்குவதை அறிந்த மாஃபா, ' உங்களுக்கு விசுவாசமாக இருப்பார் என நம்பித்தான் ஈபிஎஸ்ஸை பதவியில் அமர வைத்தீர்கள். தம்பிதுரை பேசுவதின் பின்னணியிலும் ஈபிஎஸ் பங்கு இருக்கிறது. உங்களை அவமானப்படுத்துகிறார்கள்' என டெல்லிக்கு குறிப்பு அனுப்பியிருக்கிறாராம்.

இதனால் தமிழக வருகையிலும் முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக் கொண்டாராம் நரேந்திர மோடி. அமைச்சரவையில் டம்மியாக இருப்பதில் அவருக்கு உடன்பாடில்லை. 'இந்த ஆட்சிக்கு எதிரான மிக முக்கியமான அஸ்திரமாக மாஃபா இருக்கிறார்' என்கிறார்கள் அமைச்சர்கள் வட்டாரத்தில்.

More News >>