வேர்ல்டுலேயே நம்பர் ஒன்னா வரணும் - ஹிட் அடிக்கும் சர்வம் தாளமயம் டிரெய்லர்!
நீண்ட இடைவளிக்குப்பின் இயக்குனர் ராஜிவ் மேனன் ஜி.வி.பிரகாஷை வைத்து தமிழ் படம் ஒன்றை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்துக்கு "சர்வம் தாளமயம்" எனப் பெயரிடப்பட்டுள்ளது. ராஜிவ் மேனனின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஏ. ஆர்.ரகுமானே இந்தப் படத்துக்கும் இசையமைத்துள்ளார். ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக மலையாளத்தில் முன்னணி நடிகையாகவும், பாடகி ஆகவும் உள்ள அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். இசை சம்பந்தமான படம் என்பதால் படத்தில் உள்ள அனைவரும் இசை பற்றி தெரிந்தவர்களாகவே உள்ளனர். தனது மனைவியின் பெயரில் படத்தை ராஜிவ் மேனன் தயாரித்துள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் சிங்கிள் ட்ராக் வெளிவந்து வைரலானது.
இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது. டிரெய்லரை நடிகர் தனுஷ் வெளியிட்டார். இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள தனுஷ், "சாதி மதம் இனம் மொழி போன்ற எல்லைகள் இல்லை இசைக்கு. சமூகம் இடும் தடைகளைக் கடந்து ஒருவன் தாளம் தேடும் கதை இது" என்று குறிப்பிட்டு படக்குழுவுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
இதேபோல் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலுவும் படக்குழுவை பாராட்டி, "சாமானயன் கர்நாடக சங்கீதம் உலகத்திற்குள் எப்படி நுழைகிறான் என்பதை மிக நேர்த்தியாக எடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜீவ்மேனன்.யதார்த்தமாக நடித்து அசத்தி இருக்கிறார் ஜிவி பிரகாஷ் தொடர்கிறது படம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
காட்சிகளில் ராஜிவ் மேனனின் "டச்", சிறப்பான பின்னணி இசை என டிரெய்லர் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.