வைரமுத்துவின் கருத்தை ஊதிப்பெருசாக்குவது பண்பாடற்ற செயல் பழ.நெடுமாறன் கண்டனம்
ஆண்டள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசியதை ஊதிப்பெருசாக்குவது பண்பாடற்ற செயல் என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஆண்டாளின் பெருமை குறித்து கவிஞர் வைரமுத்து ஆற்றிய உரையில் காட்டிய மேற்கோள் தங்கள் உள்ளத்தைப் புண்படுத்துவதாகச் சிலர் சுட்டிக் காட்டிக் கண்டித்தபோது, அவரும் உடனடியாக வருத்தம் தெரிவித்துவிட்டார்.
அவரது உரையை வெளியிட்ட தினமணி நாளிதழும் ஒரு முறைக்கு இரு முறை வருத்தம் தெரிவித்துவிட்டது. அதை ஏற்பதுதான் பெருந்தன்மையாகும். ஆனால், அப்பிரச்சினையை மேலும் ஊதிப் பெருக்குவது பண்டாடற்ற செயலாகும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.