வலிக்குதுன்னு ஆஸ்பத்திரிக்கு போனால் அங்கு வார்டு பாய்...

மஹாராஷ்டிர மாநிலம் பூனாவில் சிகிச்சைக்கு வந்த பெண்ணை மறைவாக படம் எடுத்த உதவியாளரை காவல்துறை கைது செய்துள்ளது.

பூனாவில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனை ஒன்றில் பெண் ஒருவர் வயிற்றுவலிக்கென சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். ஜனவரி 23ம் தேதி மருத்துவமனையில் சேர்ந்த அவருக்கு எம்ஆர்ஐ பரிசோதனை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். ஜனவரி 27ம் தேதி (சனி) இரவு அவர் எம்ஆர்ஐ எடுக்கும் பிரிவுக்குச் சென்றார். அங்கே லாகேஷ் லாஹூ உட்டேகர் என்ற 25 வயது வாலிபர் மருத்துவ உதவியாளராக பணியிலிருந்தார்.

சிகிச்சைக்கு முன் ஆடைகளை மாற்றி வரும்படி அப்பெண்ணிடம் லாகேஷ் கூறியுள்ளார். ஆடை மாற்றுவதற்கென்று ஓரறை ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அவர் வேறொரு அறைக்குச் செல்லுமாறு அப்பெண்ணை பணித்துள்ளார். லாகேஷ் கூறிய அறைக்குச் சென்று ஆடை மாற்ற ஆரம்பித்த அப்பெண், அந்த அறையில் மொபைல் போன் ஒன்று இருப்பதை கண்டு சந்தேகமடைந்து தன் கணவரிடம் கூறியுள்ளார். கணவரின் புகாரின்பேரில் அந்த போன் ஆய்வு செய்யப்பட்டபோது, அதில் குறிப்பிட்ட அப்பெண் ஆடை மாற்றும் காட்சி பதிவாகியுள்ளது தெரிய வந்தது.

பூனாவின் கோரேகான் பார்க் காவல் நிலைய போலீஸார், லாகேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More News >>