கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருத இறைவணக்கத்துக்கு எதிர்ப்பு- அரசியல் சாசன பெஞ்ச் விசாரணை
மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருத இறைவணக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கிறது.
கேந்திர வித்தியாலயா பள்ளிகள் அனைத்துமே சமஸ்கிருதம், இந்தி திணிப்பின் ஆயுதங்களாகவே செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் காலையில் கட்டாயம் சமஸ்கிருத இறைவணக்கம் பாடப்பட வேண்டும்.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடர்ப்பட்டது. இவ்வழக்கை நீதிபதிகள் பாலிநாரிமன், வினீத் சரண் பெஞ்ச் விசாரித்தது.
அப்போது, இதனை அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.