முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமானார்!
முன்னாள் மத்திய அமைச்சரும், சிறந்த தொழிற்சங்கவாதியுமான ஜார்ஜ் பெர்னாண்டஸ் 88 வயதில் காலமானார்.
அல்சைமர் என்ற மறதி நோயால் அவதிப்பட்டு வந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று காலை காலமானார். 1967 முதல் 9 முறை மக்களவை எம்.பி ஆக தேர்வு செய்யப்பட்ட ஜார்ஜ், 1977-ல் மொரார்ஜி தேசாய் அமைச்சரவையிலும், 1989-ல் வி.பி.சிங் அமைச்சரவையிலும், 1999 முதல் 2004 வரை வாஜ்பாய் அமைச்சரவையிலும் முக்கிய இலாகாக்களை வகித்தவர். சிறந்த தொழிற்சங்கவாதியாகவும் திகழ்ந்தவர் பெர்னாண்டஸ்.