அரியானா, மகாராஷ்டிரா,சிக்கிம் சட்டப்பேரவைக்கும் முன்கூட்டியே தேர்தல் - பாஜக பரிசீலனை !
மக்களவைத் தேர்தலுடன் மகாராஷ்டிரா, அரியானா,சிக்கிம் மாநிலங்களின் சட்டப் பேரவைக்கும் முன்கூட்டியே தேர்தல் நடத்துவது குறித்து பாஜக மேலிடத் தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
மக்களவைப் பொதுத் தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுகிறது. இத்துடன் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம் மாநிலங்களின் சட்டப்பேரவை ஆயுள் முடிவதால் அங்கும் மக்களவைத் தேர்தலுடன் சட்டப் பேரவைக்கு தேர்தல் நடைபெறுகிறது. தற்போது பாஜக ஆளும் மகாராஷ்டிரா, அரியானா, ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலையும் முன்கூட்டியே நடத்த அக்கட்சி யோசித்து வருகிறது. அரியானா, மகாராஷ்டிராவில் அக்டோபர் வரையும், ஜார்கண்டில் டிசம்பர் வரையும் ஆயுள் உள்ள நிலையில் அங்கும் மக்களவைத் தேர்தலை நடத்தலாமா? என பாஜக தலைவர் அமித்ஷா சம்பந்தப்பட்ட மாநிலங்களின் முதல்வர்களுடன் ஆலோசித்து வருகிறார்.