கார்த்தி17 படத்திற்கு யு சான்றிதழ்.. காதலர் தினத்தன்று தேவ் ரிலீஸ்
கார்த்தியின் 17வது படமான தேவ் படத்திற்கு யூ சான்றிதழ் வழங்கியதுடன் இந்த படம் வரும் காதலர் தினத்தன்று ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜாத் ரவி ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் படம் தேவ். இந்த படத்தில் கார்த்திக்கு ரகுல் பிரீத் சிங் ஜோடியாக நடிக்கிறார். இவர்களைத் தவிர கார்த்திக், பிரகாஷ்ராஜ், வம்சி கிருஷ்ணா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்,
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் அட்வென்ச்சர் திரில்லர் கதைக்களத்தில் சுமார் 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் மாதம் 21ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் படம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்வதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வரும் பிப்ரவரி மாதம் 14ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு தேவ் படம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கு சென்சார் போர்டு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.