இனி இந்தப் பக்கமே வரக் கூடாது.... பாஜகவை ஓட ஓட விரட்டியடித்து சாமியாடிய ராமதாஸ்

தேர்தல் தேதி நெருங்கிக் கொண்டிருப்பதால் மீண்டும் பாமகவைக் கூட்டணிக்குள் சேர்க்க தூது சென்றுள்ளனர் பாஜக தமிழக பொறுப்பாளர்கள். அப்போது பேசிய அவர்கள், 2014 தேர்தலில் மோடி பிரதமர் எனக் கூறி வாக்குகளைக் கேட்டோம். மீண்டும் நாம் அணி சேர வேண்டும்.

நமது கூட்டணியில் அதிமுக, தேமுதிக என முக்கியமான கட்சிகள் வர உள்ளன' எனக் கூறியுள்ளனர். இதனைக் கேட்டு கடுப்பான ராமதாஸ், எந்த முகத்தை வைத்துக் கொண்டு கூட்டணிக்கு வாருங்கள் எனப் பேசுகிறீர்கள். தேர்தலில் ஜெயித்த பிறகு எங்களுக்கு உரிய மரியாதையைக் கொடுத்தீர்களா...தமிழ்நாட்டுக்கு ஒரே ஒரு அமைச்சர் போதும் என பொன்னார் மட்டும் பதவியை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த 5 வருட காலத்தில் எந்தக் கோரிக்கையை நீங்கள் நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறீர்கள். 2014 தேர்தலுக்கு முன்னதாக எங்களுக்கு என்னவெல்லாம் வாக்குறுதியைக் கொடுத்தீர்கள். தேர்தல் முடிந்த பிறகு எங்கள் முகத்தையே பார்க்காமல் திருப்பிக் கொண்டீர்கள்.

இப்போது மட்டும் நாங்கள் தேவைப்படுகிறோமா.. அன்புமணிக்கு இணையான திறமையோடு இங்கு யார் இருக்கிறார்கள். இனி கூட்டணி அமைப்போம் என்ற நினைப்போடு இந்தப் பக்கமே வரக் கூடாது' என சாமியாடித் தீர்த்துவிட்டாராம்.

-அருள் திலீபன்

More News >>