`மலையாளத்தில் மம்மூட்டி தமிழில் விஷால் - தென் சினிமாவில் கவனம் செலுத்தும் சன்னி லியோன்!

நடிகர் சங்க பொதுச்செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத் தலைவராக பிஸியாக செயல்பட்டு வருகிறார் நடிகர் விஷால்.

தற்போது தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் `இளையராஜா 75 நிகழ்ச்சியை நடத்துவதில் பிஸியாக இருந்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் சண்டக்கோழி - 2. பிஸியான வேலைகளுக்கு மத்தியிலும் படப்பிப்புகளில் கலந்துகொண்டு படங்களில் நடித்து வருகிறார். அதன்படி, ‘சண்டக்கோழி 2’ படத்துக்குப் பிறகு விஷால் நடித்து வரும் படம் ‘அயோக்யா’.

பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராக இருந்த வெங்கட் மோகன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் வருகிறார். விஷாலுக்கு நாயகியாக ராஷி கண்ணா நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இன்னும் ஒரு சில மாதங்களில் படபிடிப்பு முடியும் எனத் தெரிகிறது.

இதற்கிடையில், இந்தப் படத்தில் விஷாலுடன் பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் இணையவுள்ளார். படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட ஒப்புக் கொண்டுள்ளார் சன்னி லியோன். ஏற்கனவே ஜெய் நடிப்பில் வெளிவந்த 'வடகறி' படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி தமிழில் அறிமுகமானார் சன்னி லியோன். தற்போது வடிவுடையான் இயக்கத்தில் வீரமாதேவி படத்திலும் நடித்து வருகிறார். விஷாலுடன் இணையும் படம் சன்னி லியோனுக்கு மூன்றாவது தமிழ் படமாக அமையவுள்ளது. இதேபோல் மலையாளத்தில் மம்மூட்டி நடிப்பில் உருவாகி வரும் `மதுர ராஜா' படத்திலும் ஒரு பாடலுக்கு நடமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

More News >>