அஜித்தின் அட்டகாசமான ஆட்டத்தில் டங்கா டங்கா பாடல் உருவான வீடியோ இன்று ரிலீஸ்
விஸ்வாசம் படத்தில் இடம்பெற்றுள்ள டங்கா டங்கா பாடல் உருவான வீடியோ இன்று ரிலீஸ் செய்யப்படுகிறது.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான படம் விஸ்வாசம். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, தம்பி ராமையா, யோகி பாபு உள்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படம் வெளியாகி 20 நாட்களுக்கும் மேலான நிலையில் அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்புல் ஆக ஓடிக்கொண்டிருக்கிறது விஸ்வாசம். வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.
டி.இமானின் இசையில் பாடல்கள் அனைத்தும் செம ஹிட். குறிப்பாக அடிச்சி தூக்கு, வானே வானே, டங்கா டங்கா ஆகிய பாடல்கள் யூடியூப்பில் சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில், டங்கா டங்கா பாடல் உருவாகிய விதம் ரசிகர்களுக்கு விருந்தாக படைக்க இருக்கிறது. அந்தவகையில் இன்று இரவு 7 மணிக்கு டங்கா டங்கா பாடல் உருவான வீடியோ வெளியிடப்படுகிறது.