ஜில்...ஜில்... ஜியோ சலுகைகள்ரிலையன்ஸ் ஜியோ, பயனர்களுக்கு பல டேட்டா மற்றும் அழைப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.
ப்ரைம் (prime) மட்டுமல்லாது ஜியோ போன்களை பயன்படுத்துபவர்களுக்கும் பிரத்தியேகமாக சலுகைகள் வழங்கப்படுகின்றன.
ப்ரைம் பயனர்களுக்கு டேட்டா சலுகை: கொண்டாட்ட பரிசுமைஜியோ (MyJio) செயலி மூலம் மட்டுமே பயனர்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய சலுகை இது. அதுவும் ஜியோ, பரவலான தெரிந்தெடுத்தல் (random) மூலம் குறிப்பிட்ட எண்ணிக்கை பயனர்களை தேர்வு செய்து அவர்களுக்கு மட்டுமே இதை தருகிறது.ப்ரைம் பிரிவு பயனர்களுக்கு மட்டுமே உரித்தான இச்சலுகையை இணைய தளத்தில் தேடி ஏமாந்து விடாதீர்கள். நீங்கள் ப்ரைம் பிரிவு பயனர்களானால், கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோர் மூலம் மைஜியோ செயலியை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். உங்கள் ஜியோ எண்ணை பயன்படுத்தி இதனுள் நுழையலாம். ஒருமுறைக்கான கடவு எண்ணும் (OTP) அளிக்கப்படும். மைஜியோ செயலியை திறந்ததும் நீங்கள் இந்த டேட்டா சலுகைக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கிறீர்களா இல்லையா என்பதை அறிந்து கொள்ளலாம். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பின், உங்கள் நடப்பு கணக்கின் கீழ், இப்புதிய சலுகை பற்றிய அறிவிப்பு இருக்கும். இதன் மூலம் தொடர்ச்சியாக ஐந்து நாள்களுக்கு 10 ஜிபி டேட்டாவை கட்டணமின்றி செலிபிரேஷன் பேக்கை பெற்றுக்கொள்ள முடியும்.ஜியோ போன் பயனர்களுக்கு மட்டும்:
594 ரூபாய்க்கான ரீசார்ஜ் மூலம் 28 நாள்களுக்கு நாளொன்றுக்கு 300 எஸ்எம்எஸ் என்னும் குறுஞ்செய்தி, கட்டணமில்லா அழைப்பு, ஜியோ செயலிகள் பயன்பாடு, உயர்வேகத்தில் நாளொன்றுக்கு 0.5 ஜிபி டேட்டா பெறலாம். டேட்டாவுக்கான உச்சவரம்பை கடந்ததும் வேகம் 64 kbps ஆக குறையும். இந்த திட்டம் பயனர் ஆரம்பித்தது முதல் 168 நாள்களுக்கு பயன்பாட்டில் இருக்கும்.297 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்வதன் மூலம் 28 நாள்களுக்கு நாளொன்றுக்கு 300 எஸ்எம்எஸ் என்னும் குறுஞ்செய்தி, கட்டணமில்லா அழைப்பு, உயர்வேகத்தில் நாளொன்றுக்கு 0.5 ஜிபி டேட்டா பெறலாம். இந்த திட்டம் பயனர் ஆரம்பித்தது முதல் 84 நாள்களுக்கு பயன்பாட்டில் இருக்கும்.ஜியோரயில் (JioRail) செயலி:
ஜியோ போன் பயனர்கள் ரயில் பயணச்சீட்டுக்களை பெறும்படியாய் பிரத்தியேகமாய் ஜியோரயில் செயலியை அறிமுகம் செய்துள்ளது. ஐஆர்சிடிசி (IRCTC) பயனர்கள், ஐஆர்சிடிசி தளத்தினுள் செல்லாமல் ஜியோரயில் செயலி மூலம் தங்கள் கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகள், இ-வாலெட்டுகளை பயன்படுத்தி ரயிலில் இருக்கை முன்பதிவு செய்யலாம். ஐஆர்சிடிசி பயனர்களாக பதிவு செய்திடாதவர்களுக்கு ஜியோசெயலியே ஐஆர்சிடிசி தளத்திற்கு வழிகாட்டும்.