அண்ணா பல்கலை உயர் பதவிகளுக்கு தங்க நகைகளை அன்பளிப்பாக கேட்டு பெறும் தலைமை பதவியாளர்!
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் அத்துமீறல்களைக் கேள்வி கேட்க முடியாமல் தவிக்கின்றனர் பேராசிரியர்கள். இங்கு பதிவாளராக இருந்த கணேசனுக்கும் சூரப்பாவுக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்தது. இந்தக் கடுப்பை நேர்காணலுக்கு வருகிறவர்களிடமும் காட்டுகிறார்களாம்.
'நீங்க என்ன வன்னியரா...அப்படின்னா இங்க வேலை கிடைக்காது' என முகத்துக்கு நேராகவே சொல்லிவிடுகிறார்களாம். சமீபத்தில் பல்கலைக்கழக கேம்பஸில் உள்ள மூன்று துறைகளின் இயக்குநர் பதவிக்கு கேரளாவில் இருந்து கர்நாடகாவில் இருந்தும் ஆட்களைக் கொண்டு வந்துள்ளனர்.
'யுனிவர்சிட்டியில தகுதியான பேராசிரியர்களே இல்லையா..?' என்ற புலம்பல்களும் கேட்கத் தொடங்கியுள்ளன. போதாக்குறைக்கு, பல்கலைக்கழகத்தில் எந்த ஒரு பதவிகளை நிரப்புவதாக இருந்தாலும், தலைமைப் பதவியில் இருப்பவரின் மனைவிக்குத் தங்கத்தால் பரிசு கொடுக்க வேண்டுமாம்.
பணமாக வாங்காமல் நகைகளாக அவர் வாங்கிக் குவிக்கிறாராம். அதிகப்படியான நகைககளை பரிசளிப்பவருக்கே பதவி தேடிச் செல்கிறதாம். ஊழலை ஒழிப்பதற்காக வேறு மாநிலத்தில் இருந்து வி.சியைப் போட்டோம் என விளக்கம் கொடுத்த ஆளுநர், இந்த ஊழலுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் எனக் கொதிக்கிறார்கள் பல்கலைக்கழக பேராசிரியர்கள்.