எம்.பி.தேர்தலுக்கு முன்கூட்டியே அதிமுகவில் விருப்ப மனு - அம்மா பாணியில் ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு!

மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் பிப்.4-ந்தேதி முதல் 10-ந் தேதி வரை விருப்பமனு பெறப்படும் என அதிமுக அறிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்று அதிமுக இன்னமும் முடிவெடுக்கவில்லை. தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு, கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தக் குழு என அமைத்து விட்ட அதிமுக, அடுத்தக் கட்டமாக வேட்பாளர் தேர்வுப் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது.போட்டியிட விரும்புவோரிடம் பிப்.4-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை அதிமுக தலைமைக் கழகத்தில் விரும்ப மனுக்கள் பெறப்படும் என்று தலைமை ஒருங்கிணைப்பாளர் ஒ பிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் அறிவித்துள்ளார்.

ஜெயலலிதா இருந்த போது தேர்தல் காலத்தில் இதே போன்று விருப்ப மனுக்கள் பற்றிய அறிவிப்பை முதல் ஆளாக அறிவிப்பார். மனுக்கொடுக்க வருவோர் முதல் மனுவாக ஜெயலலிதா பெயரிலும் பின்னர் தங்கள் பெயரிலும் என மனுக்களை குவிப்பர். அதேபாணி தற்போதும் தொடருமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

More News >>