அதிமுக கூட்டணியில் ராமதாஸ் தேவைதானா? கொங்கு மண்டலத்தில் பெருகும் எதிர்ப்பு
அதிமுக கூட்டணிக்குள் ராமதாஸை சேர்த்துக் கொள்வதில் கொங்கு மண்டல அமைச்சர்கள் எதிர்ப்பு காட்டுகிறார்களாம். இதுகுறித்து எடப்பாடியிடம் பேசிய அவர்கள், ராமதாஸை சேர்த்துக் கொள்வதில் நஷ்டங்களும் இருக்கின்றன. அவரை வரவேற்பதை மறுபரிசீலனை செய்யுங்கள். அவர் நம்மைக் காரணம் காட்டி திமுகவோடு பேரம் பேசுகிறார்.
தினகரனிடமும் பேரம் பேசுகிறார். தினகரனுக்கு எதிராக நம்மோடு அவர் இணைவது தேவையான ஒன்றுதான். ஆனால், நமக்கு லாபம் வரும் வரையில் அவரைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பாமகவுக்குக் கைவசம் உள்ள 5 சதவீத ஓட்டுகளும் ஸ்டாலினுக்கு எதிரான ஓட்டுகள்தான்.
அவரை சாதிக் கட்சி என முத்திரை குத்திவிட்டார் ஸ்டாலின். அவரை அழைப்பது சுயமரியாதைக்கே இழுக்கு என ராசா மூலம் பேச வைத்துவிட்டார். ஜெயலலிதாவுக்கு எதிரான ஓட்டாக அவை இருந்தாலும், படையாட்சியார் மணிமண்டபம் உட்பட வன்னியர்களுக்கு ஆதரவாக நாம் சில முடிவுகளை எடுத்துள்ளதால் அந்த வாக்குகள் வந்து சேரும்.
அவர்களுக்கு லாபம் வரக் கூடிய தொகுதிகளைக் கொடுப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கூட்டணி விஷயத்தில் ராமதாஸிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதற்கு அவர்களின் கடந்தகால செயல்பாடுகளே சாட்சி' எனக் கூறியுள்ளனர்.
அருள் திலீபன்