கூட்டணி இல்லாவிட்டால் குறைந்தபட்ச லாபம்! பொன்னார் போடும் டகால்டி கணக்கு

அதிமுக கூட்டணி முடிவாகாததால் மிகுந்த பதற்றத்தில் இருக்கிறார் தமிழிசை. திருப்பூர் தொகுதியில் நின்று ஜெயித்துக் காட்டி, மத்திய அமைச்சராகிவிட வேண்டும்' எனக் கணக்கு போட்டார்.

அவரது கணக்கில் மண் அள்ளிப் போட்டுவிட்டார் தம்பிதுரை. அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன், பாஜகவுக்கு எதிராகப் பேசியதில் கோபத்தை வெளிக்காட்டியிருக்கிறார்.

பொன்னையன் பேசியது அவருடைய கருத்து மட்டுமே எனக் கூறியிருந்தார். இதனைக் கேட்ட அதிமுக மூத்த பொறுப்பாளர் ஒருவர், ' பொன்னையன் சொல்வதால் இவருக்கு என்ன ஆனது? யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்' எனக் கூறியிருக்கிறார்.

அதேநேரம், அதிமுக கூட்டணியை ஏற்படுத்த வேண்டும் எனப் பொன்னார் நினைப்பதிலும் அரசியல் இருக்கிறதாம். இதைப் பற்றி ஆதரவாளர்களிடம் பேசியவர், 'கன்னியாகுமரியில் அதிமுக வின்னிங் பார்ட்டி கிடையாது. ஆனால், அங்குள்ள பத்து சதவீத இந்துக்களும் எனக்கு ஓட்டுப் போடுவார்கள்' என்றார்.

அதாவது, 'அதிமுகவைப் பகைக்காமல் பாடிலிடிக்ஸ் செய்கிறார். திமுகவிலும் நட்பு பாராட்டுகிறார். அதிமுக கூட்டணி இருந்தால் மீனவ கிராமங்களில் வாக்கு கேட்க முடியும்' என நினைக்கிறாராம். 'கூட்டணி இருந்தால் அதிகபட்ச லாபம், இல்லாவிட்டால் குறைந்தபட்ச லாபம்' என்பதுதான் அவருடைய மனக்கணக்கு என்கிறார்கள் காவிகள் கூடாரத்தில்.

More News >>