20 ரூபாய் டோக்கன் கொடுக்கப்பட்டது உண்மைதான் - போட்டுடைத்த ராஜசேகரன்
ஆர்.கே. நகரில் வாக்காளர்களுக்கு 20 ரூபாய் டோக்கன் கொடுக்கப்பட்டது உண்மைதான் என்று தினகரன் ஆதரவாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ராஜசேகரன் கூறியுள்ளார்.
இது குறித்து திருச்சி மாவட்டம் முசிறியில் நடைபெற்ற கூட்டத்தில் ராஜசேகரன் பேசுகையில், "ஆர்.கே. நகரில் வாக்காளர்களுக்கு 20 ரூபாய் டோக்கன் கொடுக்கப்பட்டது உண்மைதான்.
தினகரன் வெற்றி பெற முக்கிய நிர்வாகிகள் ஒன்றாக அமர்ந்து பேசி இந்த திட்டத்தை வகுத்தோம். அந்த திட்டம் நன்றாகவே பலனளித்துவிட்டது. 20 ரூபாய் டோக்கன் கொடுத்துத்தான் வெற்றி பெற்றோம்.
டிடிவி தினகரனை வெற்றி பெறச் செய்யத்தான் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கு முன்பாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சை விடியோவை வெளியிடப்பட்டது. அதுமட்டுமல்ல, ஜெயலலிதாவின் விடியோவை வெளியிடுமாறு வெற்றிவேலிடம் சொன்னதே தினகரன்தான் என்றும் ராஜசேகர் பேசியுள்ளார்.