நியூசிலாந்துக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா படுமோசம்- 92 ரன்களுக்கு ஆல்அவுட்!
நியூசிலாந்துக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டியில் படு மோசமாக விளையாடிய இந்தியா 92 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஹாமில்டனில் நடைபெறும் 4-வது போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஹாமில்டன் மைதானத்தில் இந்திய வீரர்கள் பேட்டிங் செய்யத் திணறினர். ரோகித் (7), தவான் (13), சுப்மன்கில் (9), ராயுடு (0), கார்த்திக்(0), ஜாதவ் (1), புவனேஷ்வர் (1), சகால்(18), பாண்ட் யா (16),குல்தீப் (15), கலீல் அகமது (5) என சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 30.5 ஓவர்களில் இந்தியா பரிதாபமாக ஆட்டமிழந்தது.
நியூசிலாந்து அணியின் போல்ட் 5 விக்கெட்டுகளையும், கிராண்ட் ஹோம் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் நியூசிலாந்து ஆடி வருகிறது.
5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் 3 போட்டிகளில் இந்தியா வென்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது.இன்றைய போட்டியில் கேப்டன் கோஹ்லி ஓய்வு எடுக்க ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பேற்றார். காயம் காரணமாக தோனியும் ஆடவில்லை.