வந்தா ராஜாவாகத்தான் வருவேன் ரிலீஸ் - வழக்கம் போல கட் அவுட்டுக்கு பாக்கெட் பாலாபிஷேகம்!
சிம்புவின் வந்தா ராஜாவாகத்தான் வருவேன் படம் இன்று அதிகாலை ரிலீசானது. வழக்கம் போல கட் அவுட்டுக்கு பாக்கெட் பாலாபிஷேகம் செய்து சிம்பு ரசிகர்கள் கொண்டாடினர்.
முதலில் என் படத்திற்கு கட் அவுட், போஸ்டர், பாலாபிஷேகம் என வீண் செலவு வேண்டாம் என்று வீடியோ வெளியிட்ட சிம்பு, சில நாட்களிலேயே அண்டா, அண்டாவா பால் ஊத்துங்க என்று மற்றொரு வீடியோ வெளியிட்டது, அதன் பின்னர் அண்டாவுல பால் காய்ச்சி குடிக்கக் கொடுங்க என்று சொன்னது என வந்தா ராஜாவாகத்தான் வருவேன் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இன்று காலை 5 மணிக்கு வந்தா ராஜாவாகத்தான் வருவேன் ரிலீசானது. படத்தைக் காண அதிகாலை முதலே தியேட்டர்கள் முன் குவிந்த சிம்பு ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன், வழக்கம் போல கட் அவுட்டுக்கு பாக்கெட் பாலை பீய்ச்சி அடித்து கொண்டாடினர். சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு தியேட்டரில் முதல் காட்சியை ரசிகர்களுடன் நடிகர் சிம்பு, நடிகைகள் மேகா ஆகாஷ், ரோகிணி உள்ளிட்டோர் ரசித்துப் பார்த்தனர்.