ஏறுமுகத்தில் பாமக... அன்புமணியை முழு வீச்சில் ஆதரிக்க வன்னியர்கள் முடிவு... உளவுத்துறை அறிக்கையால் திமுக, அதிமுக பரபர
மத்திய, மாநில அரசின் உளவுத்துறையினர் கொடுத்த ரிப்போர்ட்டின்படி, பாமகவின் பார்கெய்ன் பவர் அதிகரித்துள்ளது.
கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்கு பின், திமுக - அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளின் ஆதரவாளர்களாகவும் வாக்கு வங்கியாகவும் இருந்த வன்னியர் சமூகத்தினர் இனி அன்புமணியை முழு வீச்சில் ஆதரிப்பது என்கிற மனநிலையில் இருக்கிறார்கள்.
இதனைத்தான் தங்களது ரிப்போர்ட்டில் சொல்லியுள்ள உளவுத்துறையினர். பாமகவுடன் கூட்டணி வைக்கும் கட்சி வடதமிழகத்தில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும் என தெரிவித்துள்ளனர். இதனால் பாமக பக்கம் பிரதான கட்சிகளின் பார்வை அதிகமாக பதிந்துள்ளது.
அதிமுகவுடன் 90 சதவீத டீலிங் முடிந்த நிலையில் சில தொகுதிகளை அடையாளப்பட்டுத்துவதிலும், தேர்தல் செலவு தொகை விவகாரங்களிலும் தான் 10 சதவீத முடிவு எடுக்கப்படாமல் ரகசிய பேச்சுவார்த்தை இழுத்தபடி இருக்கிறது. இந்த நிலையில்தான், திமுக தூது விட்டு வருவதும் அதனால் ராமதாசுக்கும் அன்புமணிக்கும் உரசல் வெடித்ததும் தெரிந்ததே.
இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்கும் கூட்டணியில் பாமக இருக்க சாத்தியமில்லை என்பதாக அன்புமணி தரப்பில் இருந்து திமுகவுக்கு தகவல் சொல்லப்பட்டிருப்பதாக பாமக வட்டாரங்களில் செய்தி கசிகிறது. திமுக கூட்டணிக்கு பாமக ஒப்புக்கொண்டால் சிறுத்தைகளை நட்பு கட்சி பட்டியலிலிருந்து வெளியேற்றுவது திமுகவுக்கு பெரிய விசயமல்ல என்கிறது அறிவாலய தரப்பு.
- எழில் பிரதீபன்