ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு - விசாரணையை துரிதப் படுத்துகிறது உச்ச நீதிமன்றம்!

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுள்ளது உச்ச நீதிமன்றம் . வரும் 7-ந் தேதி விசாரணை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக அரசுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் எடப்பாடி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எதிராக வாக்களித்தனர். ஏற்கனவே தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்தது போல் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி, திமுக, தினகரன் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தள்ளது. இந்த வழக்கு விசாரணை ஜவ் வாக இழுத்து கொண்டே போகிறது.

நேற்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை. இதனால் திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், தினகரன் தரப்பில் ஆஜரான அபிசேக் மனுசிங்வி இருவரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளிடம், தமிழகத்தில் தற்போது நிலவிவரும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு விசாரணையை துரிதப்படுத்தக் கோரினர். இதனை நீதிபதிகள் வரும் 7-ந் தேதி விசாரணை நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தில் விசாரணை துரிதப்படுத்தும் பட்சத்தில் தீர்ப்பும் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேரின் எம்எல்ஏ பதவி தப்புமா? பறிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

More News >>