உற்சாகமாக மேஜையைத் தட்டிய மோடி .... எதிர்த்து கூச்சல் போட்ட எதிர்கட்சிகள் - பட்ஜெட் டுக்கு ஆதரவும், எதிர்ப்பும்!

நாடாளு மன்றத்தில் பட்ஜெட் தாக்கலின் போது பிரதமர் மோடி உற்சாகமாகக் காணப்பட்டார். எதிர்க்கட்சி எம்பிக்களோ கடைசி வரை கூச்சலிட்ட காட்சிகள் அரங்கேறின.

மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய பாஜக அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பியூஸ் கோயல் பட்ஜெட் உரையை வாசிக்கும் போது பாஜக அரசின் 5 ஆண்டுகால பட்டியலிட்ட போது பிரதமர் மோடி பூரிப்படைந்தார்.மேஜையைத் தட்டி உற்சாகமாக இருந்தார். சலுகைகள் திட்டங்களை அறிவித்த போதும் மோடியின் உற்சாகமான ரியாக்ஷனை அடிக்கடி நேரலையிலும் காண்பிக்கப்பட்டது. பாஜக எம்பிக்களும் ஆரவாரமாக மேஜைகளைத் தட்டினர்.

அதேநேரம் இடைக்கால பட்ஜெட்டில் சலுகைகள், புதிய அறிவிப்புகளை பியூஸ் கோயல் அறிவித்ததற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.உரத்த குரலில் கூச்சலிட்டனர். பட்ஜெட் உரையை வாசித்து முடிக்கும் வரை கூச்சலிட்டபடியே இருந்தனர்.

PM modi appreciates Budget In Parli. Modi, parliament, budget. மக்களவை, மோடி, பட்ஜெட்

More News >>