கிராம சபைகளில் கனிமொழிக்கு கூடும் கூட்டத்தால் செம காண்டு உதயநிதியை களம் இறக்கிய துர்கா!
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் கிராம சபைக் கூட்டத்தை இன்று நடத்த இருக்கிறார் உதயநிதி. இதனால் தேவையற்ற சர்ச்சைகள் ஏற்படுவதற்கும் நேற்று அவர் விளக்கம் கொடுத்திருந்தார்.
உதயநிதி வருகையையொட்டி அவரது ரசிகர் மன்ற பொறுப்பாளர்களும் களத்தில் இறங்கிவிட்டனர். தூத்துக்குடியில் கிராம சபைக் கூட்டம் நடத்தியதால் கனிமொழியின் செல்வாக்கு உயர்ந்தது.
இதையே மனதில் வைத்து உதயநிதியையும் அனுப்புமாறு துர்கா ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார். இதைப் பற்றி திருச்சி அன்பில் மகேஷிடம் பேசியிருக்கிறார் துர்கா.
'தளபதி வரும்போது என்ன மாதிரியான வரவேற்பு இருக்குமோ அதற்கு இணையாக இளம் தலைவருக்கும் ஏற்பாடுகளைச் செய்யுங்கள்' எனக் கூறியிருக்கிறார். எந்தப் பதவியிலும் இல்லாத உதயநிதி, கிராம சபையைக் கூட்டலாமா எனக் கேள்வி எழுந்தபோது, ' நல்ல பணிகளைச் செய்வதற்குப் பதவி அவசியமில்லை' என உதயநிதி கூறியிருந்தார்.
அப்படியானால், எதற்காக நீங்களும் உங்கள் தந்தையும் ஊர் ஊராகக் கிளம்புகிறீர்கள் என நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். இதன் அடுத்தகட்டமாக நாடாளுமன்றத் தேர்தலிலும் உதயநிதிக்கு சீட் வழங்கப்படலாம் என்ற பேச்சுக்கள் கிளம்பியுள்ளன. கனிமொழியை ஓரம்கட்டிவிட்டு உதயநிதியை முன்னிறுத்தும் வேலையை ஸ்டாலினின் கிச்சன் கேபினட் செய்து வருகிறது.
- அருள் திலீபன்