அழகிரியை போலவே கனிமொழியையும் ஓரங்கட்டும் ஸ்டாலின் கிச்சன் கேபினட்.... படு அப்செட்டில் செல்வி அக்கா!
சிஐடி காலனிக்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வந்தபோது முன்னிலைப்படுத்தப்பட்டார் உதயநிதி. முரசொலி பவளவிழா நிகழ்ச்சியிலும் அவர் மேடையேறினார்.
கஜா நிவாரணப் பணிகளுக்கு பல டன் அரிசிகளையும் பல கோடி மதிப்புள்ள நிவாரணப் பணிகளையும் வாரிக் கொடுத்தார். இவை அனைத்தும் அரசியலுக்கான பிள்ளையார் சுழியாகத்தான் செய்து வருகிறார் துர்கா ஸ்டாலின்.
இதனால் கோபாலபுரம் உறவுகளுக்கு இடையே புகைச்சல் வெடித்துள்ளது. ' அழகிரியை ஓரம்கட்டியதற்குக் காரணம், நாளை உதயநிதிக்கு எதிராக அவர் கிளம்பிவிடக் கூடாது என்பதால்தான். இப்போது கனிமொழியையும் ஓரம்கட்டுகிறார்கள்.
டெல்லிக்கு மட்டும் பெயரளவுக்கு அவரைச் செயல்பட வைக்கத் திட்டமிட்டுள்ளனர். ஸ்டாலின், அவரது மகன் என பக்கா பிளான் போட்டுச் செயல்படுகிறார் துர்கா.
நாளைக்கு இவர்கள் கையில் அதிகாரம் கிடைத்துவிட்டால், நாமெல்லாம் துர்காவிடம் கைகட்டி நிற்க வேண்டியதுதான். ஆட்சியில் இல்லாதபோதே இவ்வளவு ஆட்டம் போடுகிறார்கள். சீனியர்கள் எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பதால் இஷ்டத்துக்குச் செயல்படுகிறார்கள். இது எங்கே போய் முடியுமோ தெரியவில்லை' என கருணாநிதியின் மூத்த மகள் செல்வி தரப்பினர் படுஅப்செட்டில் இருக்கிறார்களாம்.
- அருள் திலீபன்