செய்யாறு அருகே வாகன விபத்து- 6 பேர் பலி
செய்யாறு அருகே லாரி மற்றும் வேன் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காஞ்சிபுரம் மாவட்டம் மாகரல் கிராமத்தினர் ஒரு வேனில் புறப்பட்டனர். இந்த வேன் செய்யாறை அடுத்த தும்பை என்ற இடத்தை நெருங்கிய போது செய்யாறில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி செங்கல் ஏற்றிய லாரி ஒன்று சென்றது.
தும்பை அருகே லாரியும், வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் வேனில் பயணம் செய்த 6 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
வேனில் பயணம் செய்த 31 பேர் படுகாயமடைந்தனர். அனைவரும் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.