காடுவெட்டி குருவுக்கு மரியாதை? நடிகர் சந்தானத்தை முன்வைத்து வலம் வரும் போர்ஜரி போட்டோ

வன்னியர் சங்கத் தலைவராக இருந்த மறைந்த காடுவெட்டி குருவின் படத்துக்கு நடிகர் சந்தானம் மரியாதை செலுத்துவது போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

நடிகர் சந்தானம் அண்மைக்காலமாக பாமகவுடன் இணக்கமாக இருந்து வருகிறார். பாமக தலைவர் ஜி.கே. மணி இல்லத் திருமணத்திலும் சந்தானம் கலந்து கொண்டார்.

இதனிடையே காடுவெட்டி குருவின் பிறந்த நாளை முன்வைத்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் நடைபெற்று வருகிறது. காடுவெட்டி குருவின் மகன் அளித்த பேட்டி, குருவின் சகோதரி பேசிய ஆவேச வீடியோ ஆகியவற்றுக்கு பாமகவினர் பதிலளித்து வருகின்றனர்.

இந்நிலையில் ”மாவீரனை வணங்கும் அண்ணன் சந்தானம்........” என்ற தலைப்பில் காடுவெட்டி குரு புகைப்படத்துக்கு நடிகர் சந்தானம் மரியாதை செலுத்துவது போன்ற ஒரு புகைப்படம் பேசுபொருளாகி இருக்கிறது. ஆனால் இது போட்டோஷாப் ஒர்க் என்றும் அது போட்டோஷாப்பாக இருந்தாலும் நன்றாக இருக்கிறது என்றும் இருதரப்பு கமெண்ட்டுகள் போட்டு வைரலாக்கி வருகின்றனர்.

More News >>