அன்பு தொல்லை... ஆசாரிக்கு டின் கட்டிய பெண் எஞ்ஜினியர்

போன் மூலம் தொல்லை கொடுத்த வாலிபரை அழைத்து, ஆட்களை வைத்து அடித்து துவைத்த தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தின் பெண் அதிகாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஹைதராபாத் அருகே போரபந்தா என்ற இடத்தைச் சேர்ந்தவர் பிரவாலிகா. இவரது வீட்டில் தச்சுவேலை செய்வதற்கு சாய்குமார் (வயது 23) என்ற இளைஞரை அழைத்திருந்தார். ஒருமுறை பிரவாலிகா தமது தோழி புல்லேறி திவ்யாவின் மொபைல் போனிலிருந்து சாய்குமாருடன் பேசினார். திவ்யா (வயத 24), பிரபல தகவல்தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் அலுவலராக பணியாற்றி வருகிறார்.    திவ்யாவின் மொபைல் போனுக்கு வாட்ஸ்அப் மூலம் செய்திகள் அனுப்பியும், போனுக்கு தொடர்பு கொண்டும் சாய்குமார் மீண்டும் மீண்டும் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் கோபமடைந்த திவ்யா, உதவிக்கு நபர்களை சேர்த்துக் கொண்டு, செகந்தராபாத்தில் ஓரிடத்திற்கு வரும்படி சாய்குமாரை அழைத்துள்ளார். திவ்யா குறிப்பிட்ட இடத்திற்கு வந்த சாய்குமாரை, இரண்டு டிரைவர்கள், தனியார் பாதுகாவலர் மற்றும் மெக்கானிக் மற்றும் திவ்யா அடங்கிய ஐவர் குழுவினர், மோட்டார் சைக்கிளில் ஏற்றி வெவ்வேறு இடங்களுக்குக் கொண்டு சென்று அடித்து துவைத்துள்ளனர்.   கடந்த வியாழன் அன்று (ஜனவரி 31) சாய்குமார் இதுகுறித்து ஹைதராபாத் கோபாலபுரம் பகுதி காவல்துறையில் புகார் அளித்தார். பிப்ரவரி 1ம் தேதி இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல் உதவி ஆணையர் கே. ஸ்ரீனிவாச ராவ், பெண்கள் தங்களுக்கு யாராவது தொல்லை கொடுத்தால் காவல்துறையை அணுக வேண்டும். நாங்கள் நடவடிக்கை எடுப்போம். சட்டத்தை தாங்களாகவே கையில் எடுத்தால், சாய்குமாரின் புகாரின் அடிப்படையில் திவ்யா உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.  
More News >>