சிபிஐ இயக்குநராக ரிஷிகுமார் சுக்லா நியமனம்!

சிபிஐ அமைப்பின் புதிய இயக்குநராக மத்தியப் பிரதேச மூத்த ஐ.பி.எஸ் அதிகாரியான ரிஷிகுமார் சுக்லாவை நியமனம் செய்துள்ளது மத்திய அரசு .

சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மா தன்னுடன் பணியாற்றிய மற்றொரு உயர் அதிகாரியான ராஜேஷ் அஸ்தானாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் முதலில் விடுப்பில் அனுப்பப்பட்டார். பின்னர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து மீண்டும் சிபிஐ இயக்குநரானார். அடுத்த 2 நாட்களில் அலோக் வர்மா தீயணைப்புத் துறைக்கு மாற்றப்பட பதவியையே ராஜினாமா செய்து விட்டார்.

இதனால் சிபிஐ தற்காலிக இயக்குநராக நாகேஸ்வரராவ் நியமிக்கப்பட்டார். இதனை எதிர்த்தும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. நேற்று இந்த வழக்கில், நாட்டின் முக்கியமான அமைப்பின் உயர் பதவிப் பொறுப்புக்கு தற்காலிகள் நியமனம் ஏன்? புதிய இயக்குநரை நியமிக்க தாமதம் ஏன்?என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசை சாடியது.

இதைத் தொடர்ந்து 2-வது முறையாக சிபிஐ இயக்குநரை தேர்வு செய்யும் அதிகாரம் படைத்த குழு பிரதமர் மோடி தலைமையில் நேற்று கூடி விவாதித்தது. இதிலும் சிபிஐ இயக்குநர் பதவிக்கு முன்வைக்கப்பட்ட பெயர்களை எதிர்க்கட்சித் தலைவர் கார்கே ஆட்சேபிக்க முடி வெட்டப்படாமல் கூட்டம் முடிந்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில் ம.பி.யைச் சேர்ந்த ரிஷிகுமார் சுக்லாவை சிபிஐ புதிய இயக்குநராக மத்திய அரசு அறிவித்துள்ளது. 1983-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான சுக்லா தற்போது ம.பி.மாநில காவலர் வீட்டு வசதி வாரிய தலைவராக உள்ளார். பாஜ கட்சியின் போது மாநில சட்டம் ஒழுங்கு டிஜிபி யாக இருந்தார். காங்கிரஸ் அரசு பதவியேற்றவுடன் இடமாற்றம் செய்து விட்டது.

2ஜி வழக்கு, அகஸ்டா ஊழல், சுரங்க ஊழல், ப.சிதம்பரம் மீதான வழக்கு என சிபிஐயின் முன் சவாலான வழக்குகள் உள்ள நிலையில் இயக்குநராகியுள்ளார் சுக்லா .

 

More News >>