நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி - இந்தியா பேட்டிங்!
நியூசிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
நியூசிலாந்துக்கு எதிரான 5 ஒருநாள் போட்டித் தொடரில் இந்தியா ஏற்கனவே 3-1 என்ற கணக்கில் இந்தியா தொடரைக் கைப்பற்றிய நிலையில் வெலிங்டனில் 5வது போட்டி இன்று நடைபெறுகிறது. கேப்டன் கோஹ்லி இந்தப் போட்டியிலும் ஆடவில்லை. கடந்த போட்டியில் ஆடாத தோனி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
டாஸ் வென்று இந்திய அணியின் கேப்டனாக உள்ள ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். முதல் 3 போட்டிகளில் ஹாட்ரிக் வெற்றி பெற்ற இந்தியா, நேப்பியரில் நடந்த 4-வது போட்டியில் 92 ரன்களில் ஆல்அவுட்டாகி மோசமான தோல்வியைத் தழுவியது. இன்றைய கடைசிப் போட்டியை வெற்றிகரமாக இந்தியா நிறைவு செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.