பீகாரில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து- 6 பேர் பலி, பலர் காயம்!
மீகாரில் அதிகாலையில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் 6 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்ததால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
பீகார் மாநிலம் ஜோக்பானியில் இருந்து டெல்லி சென்ற சீமான்சல் எக்ஸ்பிரஸ் சஹாத் என்ற இடத்தில் இன்று அதிகாலை 4 மணிக்கு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 9 பெட்டிகள் கவிழ்ந்ததில் தூக்கத்தில் இருந்த பயணிகள் இடிபாடுகளில் சிக்கி அலறினர்.
உடனடியாக மீட்புக் குழுவினர் விரைந்தனர்.இடிபாடுகளில் சிக்கி 6 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இடிபாடுகளில் சிக்கி பலர் காயமடைந்த நிலையில் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் உத்தரவிட்டுள்ளார்.