நியூசி.க்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டியில் இந்தியா 252 ரன்கள் ..... சரிவிலிருந்து மீட்ட அம்பதி ராயுடு அபார ஆட்டம்!

வெலிங்டனில் நியூசிலாந்துக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 252 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 18 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த இந்திய அணியை அம்பதி ராயுடு அபார ஆட்டத்தில் மீட்டெடுத்தார்.

இரு அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வெலிங்டனில் இன்று நடக்கிறது. டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.கடந்த போட்டியில் சரிந்தது போல் ரோகித் (2), தவான் (6), சுப்மான்கில் (7),தோனி (1) ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகி இந்தியா 18 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

இதன் பின் ராயுடுவும், தமிழக வீரர் சங்கரும் நிலைத்து நின்று ஆடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர். சங்கர் 45 ரன்களில் ரன் அவுட்டாக அவருக்குப் பின் வந்த ஜாதவ் (34) ஓரளவு கைகொடுத்தார். அபாரமாக ஆடிய அம்பதி ராயுடு சதம் வாய்ப்பை இழந்து 90 ரன்களில் அவுட்டானார்.

கடைசிக் கட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா சிக்சர், பவுண்டரி என விளாசி 22 பந்துகளில் 45 ரன் குவித்தார். கடைசியில் 252 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்டானது.253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து ஆடி வருகிறது.

More News >>