அமெரிக்க போலீசில் சிக்கிய இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்க முழு முயற்சி - இந்திய தூதர் ஹர்ஷவர்தன் தகவல் .

போலி விசாவில் குடியேறி அமெரிக்க போலீசில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை விடுவிக்கச் செய்யும் முயற்சியில் இந்திய வெளியுறவு அமைச்சகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவர்களை நேரடியாக சந்தித்து தீர்வு காண தூதரக அதிகாரிகள் முழு வீச்சில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஹர்ஷவர்தன் சிரிங்கா லே தெரிவித்துள்ளார்.

போலியான பல்கலைக்கழகத்தை நம்பி சட்ட விரோதமாக அமெரிக்காவில் தங்கியுள்ளதாக இந்திய மாணவர்களை அமெரிக்க போலீஸ் வேட்டையாடி வருகிறது. இதுவரை 130 பேர் கைது செய்யப்பட்டு, மேலும் பலரை போலீஸ் தேடிவருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்களும், அவர்களுடைய குடும்பத்தினரும் அச்சத்தில் உள்ளனர்.

இந்திய அரசு பாதிக்கப்பட்ட மாணவர்களை காப்பாற்றும் முயற்சிகளில் தற்போது ஈடுபட்டுள்ளது. மாணவர்களை விடுவிக்குமாறு அமெரிக்காவுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் வேண்டுகோள் விடுத்த நிலையில், அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளையும் துரிதப்படுத்தியுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பிரச்னைகளை நேரடியாகச் சென்று தீர்த்து வைக்கும பணிகளில் இந்திய தூதரக அதிகாரிகள் திங்கட்கிழமை முதல் ஈடுபடுவார்கள் என்று இந்திய தூதர் ஹர்ஷவர்தன் சிர்ங்காலே தெரிவித்துள்ளார்.

 

More News >>