டெல்லி வீதிகளில் பிச்சையெடுத்த முன்னாள் ராணுவ வீரர் .... கிரிக்கெட் வீரர் காம்பீரால் மறுவாழ்வு!

சிகிச்சைக்கு பணமின்றி டெல்லி வீதிகளில் பிச்சையெடுத்த முன்னாள் ராணுவ வீரரின் அவலத்தை டிவிட்டரில் பதிவிட்டு உடனடி உதவி கிடைக்கச் செய்த இந்திய கிரிக்கெட் வீரர் கெளதம் காம்பீருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

டெல்லி கன்னாட் பிளேஸ் பகுதியில் கையில் எழுதப்பட்ட வாசகம் அடங்கிய அட்டையைப் பிடித்தபடி பிச்சையெடுத்து வந்தார். 1965, 1971-ல் நடந்த இந்தியா - பாகிஸ்தான் போரில் பங்கேற்ற தமக்கு ஓய்வுக்குப் பின் உரிய பலன் கிடைக்கவில்லை. விபத்தில் இடுப்பு எலும்பு உடைந்து சிகிச்சைக்கு பணமின்றி தவிக்கிறேன். எனக்கு உதவி செய்யுங்கள் என்ற வாசகத்துடன் பிச்சை எடுத்துக் கொண்டிகுந்தது பிரபல கிரிக்கெட் வீரர் கெளதம் காம்பீர் கண்ணில்பட்டது.

பீதாம்பரன் என்ற பெயருடைய அந்தப் பெரியவர் போரில் பங்கேற்றதற்கான சான்றுகள் உண்மை எனத் தெரிய வந்துள்ளது. ஏதோ சில காரணங்களால் அவருக்கு உரிய பலன் கிடைக்காமல் உள்ளது. ராணுவ அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிவிட்டரில் காம்பீர் நேற்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு உடனடி பலன் கிடைத்துள்ளது. பீதாம்பரனுக்கு மருத்துவ சிகிச்சைக்கான முழு உதவிகள் கிடைக்கவும், மற்ற பலன்கள் கிடைக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது இதற்கு காம்பீர் நன்றி தெரிவிக்க, காம்பீருக்கும் ஏராளமானோர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

 

More News >>