மேற்கு வங்க விவகாரம்... மோடி அரசுக்கு வக்காலத்து வாங்கும் சிபிஎம் பாலபாரதி
சாரதா சிட்பண்ட் ஊழல் விவகாரத்தில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ்குமார் வீட்டை சிபிஐ சோதனை நடத்த முயன்ற சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் மோடி அரசின் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. திண்டுக்கல் பாலபாரதி ஆதரவு தெரிவித்திருப்பது சர்ச்சையாகி உள்ளது.
மோடி அரசுக்கு எதிராக மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து பிரமாண்ட மாநாட்டை நடத்தினார் மமதா பானர்ஜி. அத்துடன் மேற்கு வங்கத்தில் பாஜக காலூன்ற முயற்சிப்பதை தொடர்ந்து தடுத்தும் வருகிறார் மமமதா பானர்ஜி.
இதனால் கடுப்பாகிப் போன மோடி அரசு சாரதா சிட்பண்ட் ஊழல் விவகாரத்தில் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரை வேட்டையாட தொடங்கியது. இதற்கு எதிராக மமதா பானர்ஜி சத்தியாகிரக போராட்டத்தை நடத்தி வருகிறார்.
மமதாவின் போராட்டத்துக்கு அனைத்து மாநில கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் மமதாவை எதிரியாக பார்க்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மோடி அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. திண்டுக்கல் பாலபாரதி, சிபிஎம் மீதும் அவ்வியக்கத்தின் ஊழியர்களை நரவேட்டையாடும் மம்தாவின் ஊழலையும் அரைப்பாசிசத்தன்மையையும் எதிர்ப்பது கம்யூனிஸ்ட்களின் கடமை.அதுபோன்றுதான் பாசிசபாஜகவையும் எதிர்க்கிறோம் என சப்பைக்கட்டு கட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டிருப்பது சர்ச்சையாகி உள்ளது.