இந்தியாவின் போஃபர்ஸ் பீரங்கியில் மலிவு விலை சீன தயாரிப்பு பாகங்கள்!

இந்தியாவின் தனுஷ் ரக பீரங்கித் துப்பாக்கியில் மலிவான சீனத் தயாரிப்பு பாகங்கள் கொண்டு தயாரிக்கப்பட்டதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்திருக்கிறது.

ஆனால், இந்த பாகங்கள் மீது 'மேட் இன் ஜெர்மனி' என முத்திரை பதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஜபல்பூரில் உள்ள, துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலை அதிகாரிகள் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்திருக்கிறது. Wire Race Roller Bearings என்ற அந்த பாகங்கள் சீனத் தயாரிப்பாகும். சித் சேல்ஸ் இன்டிகேட் என்ற நிறுவனம் ஜபல்பூர் துப்பாக்கி உற்பத்தி நிறுவனத்துக்கு இதை சப்ளை செய்துள்ளது. 2013ம் ஆண்டு 35.38 லட்சத்துக்கு ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. அடுத்து 53 லட்சத்துக்கு ஒரு ஆர்டர் வழங்கப்பட்டது.

ஜெர்மனியின் லெவர்கியூசன் நகரில் உள்ள சி.ஆர்.பி ஆன்ட்ரிஸ்டெனிக் நிறுவனத் தயாரிப்பு என அதன் மீது முத்திரை இடம் பெற்றிருந்தது. ஆனால், இவை சீனாவில் உள்ள லுயாங் நகரில் உள்ள சைனோ யுனெடட் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும். ஜெர்மனி நிறுவனமும் இந்த பாகங்களை தாங்கள் தயாரிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.

போபார்ஸ் பீரங்கிகளை மாதிரியாக கொண்டு இந்த ரக பீரங்கித் துப்பாக்கிகள் தயாரிப்பட்டன. 1999ம் ஆண்டு கார்கில் யுத்தத்தின் போது அதிகம் பயன்படுத்தப்பட்டது.

 

More News >>