பின்னால தோனி இருந்தா உஷாரா இருக்கணும்! ஆட்டத்தின் முடிவை மாற்றிய ரன்அவுட் - குவியும் பாராட்டுக்கள்!
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தோனி, சமயோசிதமாக செயல்பட்டது ஆட்டத்தின் போக்கையே இந்தியாவுக்கு சாதகமாக்கினார். மோடியின் மின்னல் வேகம், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
வெலிங்டனில் நேற்று நடந்த ஒரு நாள் போட்டியில் முதலில் இந்தியா 252 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து ஆடிய நியூசி தட்டுத்தடுமாறினர். ஒரு கட்டத்தில் நியூசி வீரர் ஜேம்ஸ் நீஸம் அதிரடி காட்ட ஆட்டத்தின் போக்கு நியூசிலாந்து வெற்றிக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியது. 32 பந்துகளில் 44 ரன்கள் (4 பவுண்டரி, 2 சிக்சர்) என விளாசிய நிலையில் ஜாதவ் வீசிய 37-வது ஓவரின் 2-வது எதிர்கொண்டநீஸம் பந்தை ஸ்வீப் செய்ய முயன்றார். ஆனால் காலில் பட்டு சிலிப் பகுதியில் பந்து உருள, இந்திய விக்கெட் கீப்பர் தோனி உள்ளிட்ட வீரர்கள் அம்பயரிடம் எல்பிடபிள்யூ கேட்டு முறையிட்டனர்.அவுட் கொடுத்து விடுவாரோ என்று அம்பயரை பார்த்தபடியே ஒரு ரன் எடுத்து விடலாம் என லேசாக கிரீசை விட்டு ஓட முயன்றார்.
இந்த நேரத்தில் தான் சமயோசிதமாக செயல் பட்ட தோனி கீழே கிடந்த ஓடிச்சென்று எடுத்து மின்னல் வேகத்தில் ஸ்டம்புகளை தகர்க்க நீ ஸம் ரன் அவுட்டானார். இதன் பின் வந்த நியூசி.வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்தியா வெற்றி பெற்றது.
தோனியின் சமயோசிதம், மின்னல் வேகத்தை தல .... எப்பவும் தலதான் என்று புகழ்ந்து தள்ளியுள்ளனர். மின்னல் வேகத்தில் தோனி ரன் அவுட் செய்யும் வீடியோவும் வைரலாகி வருகிறது.