மக்களவைத் தேர்தல்: அதிமுகவில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது!
மக்களவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் அதிமுகவும் தயாராகி விட்டது.கூட்டணி யாருடன் என்பது முடிவாகாத நிலையில் அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இன்று முதல் விண்ணப்பங்கள் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இன்று காலை 10 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் விருப்ப மனுக்களை வழங்கினர்.
தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ரூ.25 ஆயிரம் கட்டணத்துடன் வரும் 10-ந் தேதி மாலை வரை வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.