இந்தியாவில் முதல் முறையாக ...சிறுமிகள் பாலியலுக்கு எதிரான சட்டத்தில் பள்ளி ஆசிரியருக்கு தூக்கு!

பாலியல்சிறுமிகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளில் ஈடுபடுவோருக்கு தூக்குத்தண்டனை என்ற சட்டம் கடந்த ஆண்டு இயற்றப்பட்ட பின் முதன்முறையாக ம.பி. ஆசிரியர் ஒருவர் மார்ச் 3-ந்தேதி தூக்கிலிடப்பட உள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 30-ந்தேதி ம.பி.யின் சத்னா மாவட்டத்தில் 4 வயது சிறுமியை கோண்டு என்ற பள்ளி ஆசிரியர் கடத்திச் சென்றான். காட்டுப் பகுதியில் அச்சிறுமியை கொடூரமாக பாலியல் சித்திரவதை செய்து சின்னாபின்னமாக்கினான். சிறுமி இறந்து விட்டதாகக் கருதி காட்டுக்குள் வீசி விட்டும் சென்று விட்டான்.

ஆனால் உயிர் பிரியாமல் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததை கண்ட சிலர் மருத்துவமனையில் சேர்த்தனர்.இதன் பின் ம.பி.அரசு துரித நடவடிக்கை எடுத்து அச்சிறுமியை மேற் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்சில் சேர்த்தது. பல நாள் சிகிச்சைக்குப் பின் அச்சிறுமி பிழைத்தாள்.

4 வயது சிறுமிக்கு எதிரான இந்தக் கொடூர பாலியல் கொடுமை கடந்த ஆண்டு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்தக் கொடுமையைச் செய்த ஆசிரியர் கோண்டு கைது செய்யப்பட்டு விசாரணையும் துரிதப்படுத்தப்பட்டது. மூன்றே மாதங்களில் தூக்குத்தண்டனை விதித்தது சத்னா நீதிமன்றம் . மேல்முறையீட்டில் தூக்குத்தண்டனையை கடந்த ஜனவரி 25-ந்தேதி உறுதி செய்தது ம.பி. உயர்நீதிமன்றம் .

இதைத் தொடர்ந்து அடுத்த மாதம் 3-ந்தேதி ஜபல்பூர் சிறையில் தூக்குத்தண்டனையை நிறைவேற்ற ஏற்பாடுகள் நடக்கிறது.

12 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்குத்தண்டனை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொண்டு வரப்பட்டது. சட்டம் வந்தபின் தூக்குக் கயிறை முத்தமிடும் முதல் ஆசிரியர் கோண்டு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ம.பி.யில் கடந்த ஒரு வருடத்தில் கடந்த ஒரு வருடத்தில் இது போன்ற குற்றத்தில் ஈடுபட்ட 19 பேருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் பட்டுள்ளதால் விசாரணை நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

 

More News >>