20 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு பிருந்தா கராத் கண்டனம்
ஆம் ஆத்மி கட்சியின் 20 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரைத்த தேர்தல் ஆணையத்தின் செயலுக்கு மார்சிஸ்ட் கம்யூனிஸ்டி கட்சி உறுப்பினர் பிருந்தா கராத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ஆம் ஆத்மி கட்சியின் 20 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரைத்துள்ள தேர்தல் ஆணையத்தின் செயல் ஜனநாயக விரோமானது. உள்நோக்கம் கொண்ட செயல்.
தேர்தல் ஆணையம் ஒரு சுதந்திரமான, பாரபட்சம் காட்டாத, தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் அமைப்பு என இனிமேலும் எடுத்துச்செல்வதற்கான தகுதியை இழக்கிறது. வன்மையாகக்கண்டிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.