உயிரோடு இருப்போரை கொல்றது... இறந்தவர்களுக்கு உயிர் கொடுப்பது ...அமைச்சர் சீனிவாசனின் உளறல் தொடர்கிறது!

இறந்து விட்ட வாஜ்பாயை தற்போதைய பிரதமர் என்று கூறிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தற்போது ராஜீவ்காந்தி என்பதற்குப் பதிலாக, உயிரோடு இருக்கும் ராகுலைக் கொன்றவர்கள் என்று அடுத்த உளறலை உளறியுள்ளார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு என்ன ஆனதோ.... உளறல் மன்னன் ஆகிவிட்டார். அம்மா இட்லி சாப்பிட்டாங்க... உப்புமா ... என்றெல்லாம் சும்மா தான் சொன்னோம் ... மன்னிச்சுக்கோங்க மக்களே என்று கையெடுத்துக் கும்பிட்டவர், அது முதல் தப்பும், தவறுமாக உளறி வருகிறார்.

கடந்த 3 நாட்களுக்கு முன்தான் பிரதமர் வாஜ்பாய் (மோடி என்பதற்கு பதிலாக) அருமையான பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார் வாஜ்பாய்க்கு உயிர் கொடுத்தார். நேற்று பழனி அருகே ஆயக்குடியில் நடந்த அதிமுக கூட்டத்தில் ராகுல் கொலையில் ஜெயலலிதாவை தொடர்புபடுத்தி கருணாநிதி பொய் சொன்னார் என்று உளறினார். பதறிப் போன அமைச்சரின் உதவியாளர் சீனிவாசன் காதில் கிசுகிசுக்க ராஜீவ் காந்தி கொலை என்று திருத்திக் கொள்ளுங்கள் என்ற அசால்ட்டாக கூறினார்.இப்படியாக அமைச்சர் சீனிவாசனின் உளறல் தொடர்கிறது .

More News >>