தொடரும் மம்தாவின் தர்ணா போராட்டம் - எதிர்க்கட்சித் தலைவர்கள் கொல்கத்தாவுக்கு படையெடுப்பு!
கொல்கத்தாவில் மம்தா பானர்ஜியின் தர்ணா போராட்டம் 3-வது நாளாக நீடிக்கிறது. வரும் வெள்ளிக்கிழமை வரை தர்ணாவை தொடர உள்ள மம்தாவுக்கு ஆதரவு தெரிவிக்க எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கொல்கத்தாவுக்கு படையெடுத்து வருகின்றனர்.
சிபிஐ நடவடிக்கையை எதிர்த்து மம்தா பானர்ஜி திடீரென தர்ணாவில் அமர்ந்து விட்டார். தேசத்தைக் காப்போம், சாகும் வரை போராட்டத்தில் பிள் வாங்க மாட்டேன் என்று கூறி தர்ணா நடத்தி வருகிறார் மம்தா.மக்களவைத் தேர்தலை
எதிர்கொள்ள இதுதான் நல்ல வாய்ப்பு என மத்திய பாஜக அரசுக்கு எதிரான ஆயுதமாக இந்தப் போராட்டத்தை நீடிக்கிறார் மம்தா .கொல்கத்தாவின் மையப் பகுதியான மெட்ரோவில் போராட்ட மேடையையே தனது முதலமைச்சர் அலுவலமாக மாற்றி அன்றாடப் பணிகளையும் நடத்தி வருகிறார். நேற்று போலீசாருக்கு பரிசு வழங்கும் விழா, அமைச்சரவைக் கூட்டம் என போராட்ட மேடையில் பிஸியாக இருந்தார்.திரளாக கூடும் திரிணாமுல் தொண்டர்களிடம் அவ்வப்போது ஆவேச உரை நிகழ்த்தி வருகிறார்.
போராட்டத்தை வரும் வெள்ளிக்கிழமை வரை நீடிக்க மம்தா முடிவெடுத்துள்ளதால் பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் நேரில் ஆதரவு தெரிவிக்க கொல்கத்தா படையெடுத்துள்ளனர்.
திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதன் பேரில் கனிமொழி எம்.பி, நேற்று இரவே மம்தாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.