பள்ளி முதல்வர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை: 12ம் வகுப்பு மாணவன் கைது
சண்டிகர்: அரியானா மாநிலத்தில் இன்று, பள்ளி ஒன்றினது பெண் தலைமை ஆசிரியரை சரமாரியாக துப்பாக்கியில் சுட்டு கொலை செய்த 12ம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
அரியானா மாநிலம், யமுனா நகர் மாவட்டத்தில் உள்ள விவேகானந்தா என்ற பள்ளியின் முதல்வர் ரிட்டு சாப்ரா. இந்த பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் இன்று நன்பகல் 12 மணியளவில் திடீரென பள்ளி முதல்வரின் அறைக்கு வந்து அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
படுகாயம் அடைந்த முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரவிக்கப்பட்டது.
இதன்பிறகு, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவனை சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும், முதல்வரை சுட்டதற்கான காரணமும், துப்பாக்கி மாணவனுக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.