உங்களுக்கு பாஜக கேபினட்டில் இடம்... தம்பிதுரையோடு தொடரும் பேச்சு

அதிமுக அமைச்சர்களோடு பாஜக கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருப்பதை தம்பிதுரை விரும்பவில்லை. அவரை எப்படியாவது வழிக்குக் கொண்டு வர வேண்டும் என அதிமுகவின் முக்கிய புள்ளிகள் பேசி வருகின்றனர்.

கரூரில் செந்தில்பாலாஜி நின்றாலும் உங்களுடைய வெற்றிக்கு நாங்கள் கியாரண்டி. அதிக வாக்கு வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். கரூரில் உங்களுடைய செல்வாக்கை யாராலும் அசைக்க முடியாது. தேர்தலுக்குப் பிறகு பாஜகதான் வெல்லும். அப்படி அவர்கள் மீண்டும் ஆட்சியமைத்தால் உங்களுக்கு கேபினட் பதவி வாங்கித் தருகிறோம் எனப் பேசி வருகிறார்களாம்.

ஆனால், டெல்லி வட்டாரமோ, மைத்ரேயனுக்கு கேபினட் கொடுக்க வேண்டும் என்றால்கூட ஏற்றுக் கொள்வோம். எங்களைத் தூக்கி சுமப்பது பாவம் என அவர் பேசிய பிறகு அவரை எப்படி ஏற்றுக் கொள்வோம் எனக் கொந்தளிக்கிறார்களாம்.

இருப்பினும் சமாதான தூது முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கிறதாம்.

அருள் திலீபன்

More News >>