தருமபுரியில் சௌம்யா அன்புமணி போட்டி? உற்சாகத்தில் பாமக!
அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்து தருமபுரி தொகுதியில் போட்டியிடுவதை அன்புமணி விரும்பவில்லையாம். அந்தத் தொகுதியில் தன்னுடைய மனைவி சௌம்யாவை நிறுத்தலாம் என முடிவு செய்திருக்கிறாராம்.
தருமபுரி அல்லது ஆரணி ஆகிய இரண்டு தொகுதிகளில் ஒன்றில் சௌம்யா நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறதாம். அதிமுக அணியில் 6 சீட்டுகளோடு ராஜ்யசபா சீட்டும் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டதால், இப்படியொரு முடிவை அவர் எடுத்திருக்கிறார் என்கிறார்கள் பாட்டாளி சொந்தங்கள்.
பசுமைத் தமிழகம் உள்பட சுற்றுச்சூழல் விஷயங்களில் அதிக ஆர்வமுடையவராகச் செயல்பட்டு வருகிறார் சௌம்யா. அவரது அப்பா கிருஷ்ணசாமி, சகோதரர் விஷ்ணுபிரசாத் ஆகியோர் அரசியலில் கோலோச்சுவதால், அவர்கள் வழியிலேயே சௌம்யாவும் தேர்தலில் நிற்க இருக்கிறார் என்கிறார்கள் பாமக பொறுப்பாளர்கள்.
-எழில் பிரதீபன்