பாஜக கூட்டணியை எதிர்க்க தம்பிதுரையை தூண்டிவிட்டதே சசிகலாதான்... டெல்லியிடம் வத்தி வெச்ச அமைச்சர்கள்!

அதிமுக கூட்டணியில் பாஜகவை சேர்த்து கொள்வதில் முதல்வர் எடப்பாடிக்கு உடன்பாடில்லைதான்.. ஆனால் டெல்லியின் நெருக்கடியும் முன்வைக்கப்படும் மிரட்டல்களும் எடப்பாடியை தற்போது அதிமுக-பாஜக கூட்டணிக்கு சம்மதிக்க வைத்திருக்கிறது.

கட்சி மூத்த நிர்வாகிகள், தொண்டர்களின் விருப்பமும் அதுதான். வரும் 8 ந்தேதி கூட்டப்படும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜகவின் எதிர்ப்புணர்வை குறைத்து மா.செ.க்களை சம்மதிக்க வைக்கும் சூழலை ஏற்படுத்த எடப்பாடி திட்டமிட்டுள்ளார்.

இதற்கிடையே, பாஜக கூட்டணியை எதிர்ப்பதில் தம்பிதுரையும், பொன்னையனும் சீரியசாக இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் மேலும் பல சீனியர்களை வளைக்கும் முயற்சியை எடுத்திருப்பதால் மா.செ.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் காரசார விவாதத்திற்கு அடி போடப்படகிறதாம்.

இதனையெல்லாம் சமாளிக்க மா.செ.க்களிடம் எம்.எல்.ஏ.க்களிடமும் முன் கூட்டியே பேசி சரி கட்டுமாறு அமைச்சர்களுக்கு அஸைண்மெண்ட் கொடுத்துள்ளாராம் எடப்பாடி. இந்த நிலையில், பாஜக கூட்டணியை தம்பிதுரை எதிர்ப்பதற்கு காரணம் சசிகலா தான் என ஒரு மெசேஜை டெல்லிக்கு தட்டிவிட்டுள்ளனராம் எடப்பாடிக்கு நெருக்கமான டெல்லி லாபியை மெயின்டெய்ன் செய்து வரும் கொங்குதேச அமைச்சர்கள்.

More News >>