திமுக ஆட்சியில் கீழடியில் அருங்காட்சியகம்.. ஸ்டாலின் உறுதி

திமுக ஆட்சியில் கீழடி அகழ்வாராய்ச்சி பொருட்களை கொண்டு அருங்காட்சியகம் அமைப்போம் என அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஊராட்சி சபை கூட்டம் முடிவடைந்ததும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அங்கு, நான்கு கட்டங்களாக தொல்லியல் ஆய்வு நடைபெற்ற பகுதிகளுக்குச் சென்று நேரில் பார்வையிட்டார்.

அப்போது மத்திய அரசால் திட்டமிட்டு ஆய்வுப்பணிகள் புறக்கணிக்கப்படுவது குறித்து ஸ்டாலினிடம் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். அப்போது ஐந்தாம் கட்ட பணிக்கு நேற்று அனுமதியளித்துள்ள மத்திய அரசு, தொடர்ந்து விரிவான ஆய்வுகளை மேற்கொள்வதை உறுதிசெய்ய வலியுறுத்தினார்.

மேலும் தி.மு.க ஆட்சி வந்தவுடன், கீழடியிலேயே அருங்காட்சியகம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

முன்னதாக கீழடியில் அகழ்வாராய்ச்சி நடந்த பகுதிகளை பார்வையிடச் சென்ற மு.க. ஸ்டாலினை பார்த்து அந்த வழியில் உள்ள தனியார் பள்ளி சிறார்கள் உற்சாகமடைந்து கூச்சலிட்டனர். இதனால் தனது காரில் இருந்து இறங்கிய ஸ்டாலின் அவர்களுடன் கைகுலுக்கி மகிழ்ச்சி தெரிவித்தார்.

 

More News >>